இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல்




ஜோஹன்ஸ்பெர்க்
: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர்.

மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.



ஒசாமா கொல்லப்படவில்லை தலிபான்கள் மறுப்பு...


ஒசாமா கொல்லப்படவில்லை தலிபான்கள் மறுப்பு அமெரிக்காவின் ஆதாரங்கள் போலியானது என்கின்றது லண்டன் பத்திரிகை...

அ‌ல்-க‌ய்தா தலைவ‌ர் உஸாமா பி‌ன்லேடன் மரணம் சம்மந்தமாக வெளியான புகைப்படம் போலி என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு இணையத்தளம் ஒன்று வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இரத்தக் கறையுடன் அரைக் கண் திறந்து காணப்படும் அவரது புகைப்படம் போலி என்றும் இரண்டாண்டுகளுக்கு முன்பே இன்டர்நெட்டில் பல இணையதளங்களிலும் வெளியாகி இருந்ததும் தெரிய வந்துள்ளது.

1998-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேன் புகைப்படத்துடன் அதேமாதிரியான ஒருவரின் புகைப்படம் இணைத்து உருவாக்கப்பட்ட புகைப்படம் தான் இன்று பல பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் வெளிவந்துள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவின் சதிதான்!!! அடுக்கடுக்கான ஆதாரங்கள்...

செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவின் சதிதான்!!! அடுக்கடுக்கான ஆதாரங்கள்...

8000கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலை மன்னிப்புக் கேட்கும் செர்பியா நாடாளுமன்றம்












இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் வன்கொடுமையாகக் கருதப்படும் 1995 போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலைக்காக செர்பியா நாடாளுமன்றம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இருப்பினும் செர்பிய நாடாளுமன்றத்தில் இந்த மன்னிப்புக்கான முன்மொழிவு வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்திலேயே நிறைவேற்றப்பட்டது.

8000க்கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னிய செர்பியப் படைகள் அப்போதைய செர்பிய அதிபர் சுலோபோடான் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்று குவித்தன என்பது அறிந்திருக்கலாம். மிலோசெவிச்சிற்குப் பிறகு பதவி ஏற்ற எந்த ஓர் அரசும் இப்படுகொலை குறித்து வருத்தம் தெரிவிக்கவோ, படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீள் குடியிருப்பு அளிக்கவோ செய்யவில்லை என்பதும் நாடாளு மன்ற வாக்கெடுப்பில் அலசப்பட்டது.

இருப்பினும் இந்த மன்னிப்பு ஒரு நாடகம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்ப்பந்தத்துக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு என்றும் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த போஸ்னியர் ஒருவர் தெரிவித்தார். இந்த வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், "செர்பியா இப்படுகொலைக்காக வருத்தம் தெரிவிப்பது வெட்கக் கேடானது" என்று தெரிவித்தார். வெளிமிர் எலிக் என்ற இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதே கருத்தைத் தெரிவித்தார். "மறந்து போன நிகழ்வை மீண்டும் நினைவுபடுத்துவது போல இந்த வாக்கெடுப்பு உள்ளது" என்று கூறினார்.

1995-ல் போஸ்னியாவில் கலவரம் வெடித்த போது, ஐநா கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட அபயப் பகுதிக்குள் இருந்த ஆயுதங்களற்ற பொதுமக்களை போஸ்னிய செர்பிய இராணுவம் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்றுகுவித்தது இன்றும் அழியா நினைவில் உள்ளது.

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் அற்பமானவையா???

கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை நம்பலாமா?


பதில்: இறைவன் தனது அத்தாட்சிகளைக் காட்டுவான் என்பதிலோ, அவற்றை நம்ப வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாயையையும், மாயத் தோற்றங்களையும் அத்தாட்சிகள் என்று கூறுவோர் தான் இவை அத்தாட்சி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.


தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இதுபோன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன. சிலுவை, மேரி வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. எல்லா மதத்தினரும் தற்செயலாக அமைந்து விட்ட இது போன்ற காட்சிகளைக் காட்டுகின்றனர். உங்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் தாமா?




இதோ வணக்கம் செய்யும் மரம் என்று நீங்கள் கூறினால் கும்பிடுவது போல தோற்றமளிக்கும் மரங்களை அவர்கள் காட்டுவார்கள். அல்லாஹ் என்ற அரபு எழுத்து எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் காட்டினால் இல்லை சூலம் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுவார்கள். இறைவனின் அத்தாட்சிகள் இவ்வளவு பலவீனமாக, வமையற்றதாக ஒருக்காலும் இருக்க முடியாது.


அத்தாட்சிகள் என்பன, ஒரே இறைவன் இருக்கிறான் என்பதைத் தெளிவாக அறிவிக்கும். நீங்கள் கூறுபவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் பல கடவுள் உள்ளனர் என்பதற்கும் இது போன்ற அத்தாட்சிகளை (?) மற்றவர்கள் காட்டுவார்கள்.


அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனது அத்தாட்சிகள் பற்றிய அறிவும் இல்லாதவர்கள் தான் மாயைகளை அத்தாட்சிகள் என்பர்.

மூஸா நபி இலேசாக பாறையில் தட்டியவுடன் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இது போல் எவரும் செய்ய முடியாது என்பதால் இதை அத்தாட்சி எனலாம்.


வானங்கள், பூமி, சூரியன், கோள்கள், மழை மேகங்கள், விண்மீன்கள், காற்று, பயிர்கள் முளைப்பது, கருவில் மனிதன் வளர்வது, மனிதனுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் அற்புதங்கள் என கோடானு கோடி அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டே தான் இருக்கிறான்.


இத்தகைய பிரம்மாண்டமான மலைக்கச் செய்யும் அத்தாட்சிகளை விட்டு விட்டு அற்பமானவைகளை அத்தாட்சி என்று கூறுவது முற்றிலும் தவறாகும். கோடி கோடியாக செல்வம் வைத்திருப்பவன் செல்லாத காலணாவைப் பெரிதாக நினைப்பது போலவே இவர்களின் நிலைமை அமைந்துள்ளது.


இத்தகைய அற்பமான தற்செயலானவற்றை அத்தாட்சி என்று கூற ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் தோற்று விடுவீர்கள்! இது போன்ற செல்லாக்காசுகள் உங்களை விட மற்றவர்களிடம் மூட்டை மூட்டையாகக் குவிந்துள்ளன.

இவை அத்தாட்சி இல்லை என்று நம்மிடம் ஆதாரம் கேட்கக் கூடாது. யார் அத்தாட்சி என்று வாதிடுகிறார்களோ அவர்கள் தான் இது போன்றவைகளை அத்தாட்சிகளாக இறைவன் கூறியிருக்கிறான் என்ற ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

அல்லாஹ்வின் அழகிய ஆலயங்கள்...


Masjid al-Haram, Mecca, Saudi Arabia
Al-Masjid al-Nabawi
Al-Aqsa Mosque, Jerusalem
Faisal Mosque, Islamabad, Pakistan
Baitul Mukarram, Bangladesh
Sultan Ahmed Mosque, Istanbul
Grozny Central Dome Mosque
Masjid Negara, Malaysia
Sheikh Zayed Mosque
Sultan Qaboos Grand Mosque, Oman
Masjid e Tooba (Gol Masjid), Karachi, Pakistan






Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends