8000கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலை மன்னிப்புக் கேட்கும் செர்பியா நாடாளுமன்றம்












இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் வன்கொடுமையாகக் கருதப்படும் 1995 போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலைக்காக செர்பியா நாடாளுமன்றம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இருப்பினும் செர்பிய நாடாளுமன்றத்தில் இந்த மன்னிப்புக்கான முன்மொழிவு வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்திலேயே நிறைவேற்றப்பட்டது.

8000க்கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னிய செர்பியப் படைகள் அப்போதைய செர்பிய அதிபர் சுலோபோடான் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்று குவித்தன என்பது அறிந்திருக்கலாம். மிலோசெவிச்சிற்குப் பிறகு பதவி ஏற்ற எந்த ஓர் அரசும் இப்படுகொலை குறித்து வருத்தம் தெரிவிக்கவோ, படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீள் குடியிருப்பு அளிக்கவோ செய்யவில்லை என்பதும் நாடாளு மன்ற வாக்கெடுப்பில் அலசப்பட்டது.

இருப்பினும் இந்த மன்னிப்பு ஒரு நாடகம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்ப்பந்தத்துக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு என்றும் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த போஸ்னியர் ஒருவர் தெரிவித்தார். இந்த வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், "செர்பியா இப்படுகொலைக்காக வருத்தம் தெரிவிப்பது வெட்கக் கேடானது" என்று தெரிவித்தார். வெளிமிர் எலிக் என்ற இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதே கருத்தைத் தெரிவித்தார். "மறந்து போன நிகழ்வை மீண்டும் நினைவுபடுத்துவது போல இந்த வாக்கெடுப்பு உள்ளது" என்று கூறினார்.

1995-ல் போஸ்னியாவில் கலவரம் வெடித்த போது, ஐநா கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட அபயப் பகுதிக்குள் இருந்த ஆயுதங்களற்ற பொதுமக்களை போஸ்னிய செர்பிய இராணுவம் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்றுகுவித்தது இன்றும் அழியா நினைவில் உள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends