டுபாயில் காளை மாட்டின் `செல்' மூலம் குளோனிங் ஒட்டகம் உருவாக்கம்.


டுபாயில் உள்ள குளோனிங் ஆய்வகத் தில் ஒட்டகம் ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மையத்தில் முதலாவது ஒட்டகம் குளோனிங் முறையில் உரு வாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது ஒட்டகம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண் ஒட்டகமாக உருவாக்கப் பட்ட இதற்கு `பின் ஸெகான்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 383 நாட்களுக்குப் பிறகு இது உரு வானது. காளை மாடு ஒன்றின் `செல்' மூலம் இந்த ஒட்டகம் உருவாக்கப்பட் டுள்ளது. முதல் முறையாக உயிருடன் உள்ள ஒரு விலங்கின் செல்லிலிருந்து குளோனிங் முறையில் ஒட்டகம் உருவாக் கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இறந்த ஒட்டகத்தின் கரு செல் மூலம் ஒட் டகம் உருவாக்கப்பட்டது. அப்போது பெண் ஒட்டகம் உருவானது. இதற்கு `இன் ஜாஸ்' என பெயரிடப்பட் டது. இந்த ஒட்டகம் நல முடன் உள்ளதாக விஞ் ஞானிகள் தெரிவித்தனர். தோல் செல் மூலம் கரு உருவாகி அதன் மூலம் ஒட்டகம் குளோனிங் முறையில் எளிதாக உரு வாக்கப்பட்டதாக இம் மையத்தில் உள்ள விஞ் ஞானிகள் தெரிவித்தனர். டுபாயில் உள்ள குளோனிங் ஆய்வு மையம் 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக் கப்பட்டது. இம் மையம் 2008ஆம் ஆண்டு கரு நுண்ணுயிரி பெருக்கம் மூலம் இரட்டை ஒட்டகக் குட்டிகளை உரு வாக்கி சாதனை படைத்தமை குறிப்பிடத் தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends