தீவிரவாத முத்திரை குத்தி கைது செய்ததற்காக இந்திய டாக்டர் ஹனீப்பிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு

தீவிரவாத முத்திரை குத்தி கைது செய்ததற்காக இந்திய டாக்டர் ஹனீப்பிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு

தீவிரவாத முத்திரை குத்தி கைது செய்ததற்காக இந்திய டாக்டர் ஹனீப்பிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பணியாற்றியவர் இந்திய டாக்டர் ஹனீப். கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளிடம், டாக்டர் ஹனீப் பயன்படுத்திய சிம்கார்டு ஒன்று மீட்கப்பட்டது. இதையடுத்து ஹனீப் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவரது விசா ரத்தானது. இதனால் அவரது தொழிலும் பாதிப்படைந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில், இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத செயலுக்கும், டாக்டர் ஹனீப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் ஹனீப்பிடம் ஆஸ்திரேலிய அரசு தனது வருத்தத்தை பகிரங்கமாக ஒரு அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டது. அந்த அறிக்கையில், 'சந்தேகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் டாக்டர் ஹனீப் அப்பாவி; அவர் தவறுதலாக கைது செய்யப்பட்டார் என்பதை ஆஸ்திரேலிய போலீஸ் ஏற்கிறது.

இதற்காக ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு கேட்கிறது. அவருக்கு வழங்கப்படும் நஷ்ட ஈடு மூலம் துரதிர்ஷ்ட சம்பவம் முடிவுக்கு வரும். டாக்டர் ஹனீப் அவரது தொழிலில் தொடர்ந்து ஈடுபட ஆஸ்திரேலியா அனுமதிக்கும்' என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹனீப் வக்கீல் ராட் ஹாக்சன் கூறுகையில், "இந்த மன்னிப்பு மூலம் ஹனீப் அப்பாவி என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அநீதியை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, அப்பாவி என கூறிய ஆஸ்திரேலிய அரசுக்கு வாழ்த்துக்கள்" என்றார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் டாக்டர் ஹனீப்புக்கு ஏராளமான ஆஸ்திரேலியர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு ஆதரவாக இருந்த ஆஸ்திரேலிய மக்களுக்கு டாக்டர் ஹனீப் நன்றி தெரிவித்தார். டாக்டர் ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கும் நஷ்ட ஈடு தொகை ரகசியமாக தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் சிறப்பான முறையில் திருக்குர் ஆன் தமிழாக்காம் மற்றும் இஸ்லாம் சம்மத்தமான பல சிறப்பான புத்தகங்கள்-ஆடியேகள்-வீடியேகள்-கேள்வி பதில்-இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் இஸ்லாம் சம்மத்தமான பல நல்ல விடயங்கள் உள்ளன.
இந்த இணையதளத்தில் இஸ்லாம் சம்மத்தமான பல சிறப்பான விடயங்கள் உள்ளன இன்ஸா அல்லாஹ் இவற்றை பாருங்கள்.

சாதியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு - அறிஞர் அண்ணா
உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்-
அறிஞர் பெர்னாட்ஷா

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.









குடும்பம் குடும்பமாக இஸ்லாத்தில் இணையும் மக்கள் அல்லாஹு அக்பர்
அல் குர் ஆன் 9-32
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர், மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்


அல்லாஹு அக்பர் கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ராஜா அல்லாஹு அக்பர்



கடநத் 23-06-2010 வெள்ளிக்கிழமை அன்று நடந்த பேச்சு பயிற்சி முகாமில் , விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுமதசகோதரர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளக்கி கூறி , கலிமா சொல்லிகொடுத்தார் .

தன்னுடைய பெயரை ராஜா முஹம்மதுஎன்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” கடவுளை வணங்கும் முறை தன்னுள்ளத்தை ஈர்த்ததாக கூறினார் .

அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள். அல்லாஹ்கு அக்பர்....


இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை மைக் டைசன் உம்ரா பயணத்தில்

Al Quran 9:32அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர், மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திக்கிறோம்.

8000க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை “இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்”

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் வன்கொடுமையாகக் கருதப்படும் 1995 போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலைக்காக செர்பியா நாடாளுமன்றம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இருப்பினும் செர்பிய நாடாளுமன்றத்தில் இந்த மன்னிப்புக்கான முன்மொழிவு வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்திலேயே நிறைவேற்றப்பட்டது.

8000க்கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னிய செர்பியப் படைகள் அப்போதைய செர்பிய அதிபர் சுலோபோடான் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்று குவித்தன என்பது அறிந்திருக்கலாம். மிலோசெவிச்சிற்குப் பிறகு பதவி ஏற்ற எந்த ஓர் அரசும் இப்படுகொலை குறித்து வருத்தம் தெரிவிக்கவோ, படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீள் குடியிருப்பு அளிக்கவோ செய்யவில்லை என்பதும் நாடாளு மன்ற வாக்கெடுப்பில் அலசப்பட்டது.

இருப்பினும் இந்த மன்னிப்பு ஒரு நாடகம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்ப்பந்தத்துக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு என்றும் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த போஸ்னியர் ஒருவர் தெரிவித்தார். இந்த வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், "செர்பியா இப்படுகொலைக்காக வருத்தம் தெரிவிப்பது வெட்கக் கேடானது" என்று தெரிவித்தார். வெளிமிர் எலிக் என்ற இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதே கருத்தைத் தெரிவித்தார். "மறந்து போன நிகழ்வை மீண்டும் நினைவுபடுத்துவது போல இந்த வாக்கெடுப்பு உள்ளது" என்று கூறினார்.

1995-ல் போஸ்னியாவில் கலவரம் வெடித்த போது, ஐநா கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட அபயப் பகுதிக்குள் இருந்த ஆயுதங்களற்ற பொதுமக்களை போஸ்னிய செர்பிய இராணுவம் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்றுகுவித்தது இன்றும் அழியா நினைவில் உள்ளது.


பிஜே அவர்கள் சொல்லும் சில கருத்துக்களை சில காலங்களுக்குப் பிறகு வாபஸ் வாங்கி்க் கொள்கிறார். அப்படி இருக்கும் போது தற்போது அவர் கூறும் கருத்துக்களை எவ்வாறு நம்புவது?

தாம் செய்யும் அல்லது தாம் கூறும் ஒரு கருத்து தவறு என்று தெளிவாகும் போது தனது முந்தையக் கருத்தை மாற்றிக் கொள்வது தான் நல்லப் பண்பு. அப்படிப்பட்டவர்களிடம் தான் நியாயமிருக்க முடியும். முதலில் ஒன்றைச் சொல்லி விட்டு பிறகு அதை மாற்றிச் சொல்வது என்பது இன்றைக்கல்ல இஸ்லாமிய அறிஞர்களின் வரலாற்றில் காலந்தோரும் நடக்கக் கூடிய ஒன்றாகும். இதில் மிக பிரபல்யமானது அறிஞர் ஷாஃபி இமாம் அவர்களின் 'கவ்ல் கதீம்' 'கவ்ல்ஜதீத்' என்றத் தொகுப்பாகும்.தமக்கு முன்னர் கிடைத்தவற்றை வைத்து அவர்கள் வெளியிட்ட, மக்களிடம் சொன்ன கருத்துக்கள் பிறகு அதற்கு மாற்றமான ஆதாரம் கிடைக்கும் போது ஆதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது முந்தையக் கருத்தை வாபஸ் வாங்கியது என்று அவர்கள் குறிப்பிடுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.நாம் ஒரு கருத்தை வெளியிடுகிறோம், அதற்கு மாற்றமான ஒரு தெளிவான ஆதாரம் கிடைக்கின்றது என்றால் ஆதாரத்துக்கே முதலுரிமைக் கொடுத்து நம் கருத்தை பின்னுக்குத் தள்ளி விட வேண்டும். ஆனால் சில முரட்டு அறிஞர்களிடம் இந்தப் பண்பு இருப்பதில்லை. தாம் வெளியிட்ட கருத்தை எப்படியாவது சுற்றி வளைத்து நியாயப்படுத்தத்தான் முயல்கிறார்களேத் தவிர இறைவனின் மார்க்கத்தில் நம் சுய கருத்துக்கு இடமிருக்கக் முடியாது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.தர்கா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனிமனித வழிபாடு, இயக்க வழிபாடு என்று எல்லா வழிபாடுகளுக்கும் இந்த மனநிலையே காரணமாகும்.முந்தைய கருத்தை மாற்றும் போது அக்கருத்தை நம்பியவர்களின் நிலை என்னவென்ற சிந்தனை என்றக் கேள்விக்கு பதில் மிகவும் எளிது.முந்தையக் கருத்தும் ஒரு ஆதாரத்தின் மீதே அமைந்ததாக இருந்தால் அக்கருத்தை அன்றைக்கு ஏற்றுக் கொண்டவர்கள் சரியானதையே செய்துள்ளார்கள் என்று பொருள். அதற்கு மாற்றமான வேறொரு ஆதாரம் கிடைக்கும் போது முந்தைய ஆதாரம் தளர்த்தப்பட வேண்டும். பிடிவாதம் பிடிப்பது நம்மை வேறு திசையில் திருப்பி விடும்.


பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம்
FACE BOOK

FACE BOOK என்பது ஒரு அருமையான சமூக இனையதளம். இதன் மூலம் நல்லவற்றையும் தீயவற்றையும் செய்ய முடியும். ஆனால் இதில் செய்யப்படுகின்ற பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம். எப்படி என்றால் உதாரணம் நீங்கள் மாத்திறம் ஒரு சினிமா பாடலை பார்கின்றீர்கள் என்றால் அதை ஒரு முறை பார்த்ததுக்கான பாவம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த பாவமான சினிமா பாடலை FACE BOOK க்கின் மூலம் மற்ற நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை உங்களது அனைத்து நண்பர்களும் பார்ப்பார்கள். அப்படி அனைவரும் பார்க்கும் போது அந்த பாவத்தை அவர்களும் சுமக்க வேண்டும். பாவத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக அவர்கள் அனைவரது பாவத்தையும் நீங்களும் சுமக்க வேண்டும். உங்களிடம் 1000 நண்பர்கள் இருந்தால் அவர்கள் 1000 பேரின் பாவத்தையும் நீஙகள் சுமக்க வேண்டும். அந்த நண்பர்களில் ஒருவர் அவரின் நண்பருக்கு அனுப்பும் போது அந்த நண்பர்களின் பாவத்தையும் நீங்கள் சுமக்க வேண்டும் இப்படி 1000 ரம் 2000 மாக மாறலாம் ஏன் ஆயிரம் லச்சங்களாகவும் மாறலாம். அதை போன்றே நன்மையும் நீங்கள் ஒரு நன்மையான விடயத்தை நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை இவ்வாரு பார்க்கும் அனைவரது நன்மையும் உங்களுக்கும் கிடைத்து விடும். “நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் யார் ஒரு நன்மையான காரியத்தை ஆரம்பித்து வைத்தால் அந்த நன்மை இருக்கும் காலம் எல்லாம் அந்த நன்மை அவருக்கு கிடைகும் யார் ஒரு தீமையை ஆரம்பித்து வைத்தால் அந்த தீமை இருக்கும் காலம் எல்லாம் அவருக்கு அந்த தீமை கிடைக்கும்” எனும் கருத்து பட கூறினார்கள் எனவே FACE BOOK மூலம் நல்லவற்றை மட்டும் இன்ஸா அல்லாஹ் செய்யுங்கள்.

அண்மையில் FACEBOOKகில் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரத்தை ஒருவன் வரைந்து இருந்தான் எமது உயிரிளும் உயர்வான நபி(ஸல்)அவர்களை இவ்வாறு கேலி சித்திரம் வரைந்ததை ஒரு போதும் ஏற்க முடியாது. இது நிச்சயம் பிழையான ஒரு செயல் இதை செய்தவன் தண்டிக்க படனும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இன்ஸா அல்லாஹ் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரம் வரைந்த இவனுக்கு அல்லாஹ்வின் கிதாயத் கிடைக்கும் அல்லது அல்லாஹ்வின் தண்டனை கிடைக்கும். இப்படிபட்டவன்கள் தண்டிக்கப்பட்டால்தான் இனி மீண்டும் இந்த செயலை எவறும் செய்ய மாட்டார்கள் இவன் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் இது தொடர்பாக FACEBOOK அண்மையில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது . இது பிழையான ஒரு விடயமாகும். காரணம் FACEBOOK ஒரு சிறந்த சமூக இணையதளம் இதை பயன்படுத்தி நல்லதையும தீயதையும் செய்ய முடியும். FACEBOOKகை ஒருவன் தவராக பயன்படுத்தியதற்காக FACEBOOKயே 100% தடை செய்வது பிழையாகும். உதாரணம் பள்ளிவாசளில் செருப்பு களவு போகின்றது என்பதற்காக பள்ளிவாசலையே தடை செய்ய முடியுமா? இல்லை மாறாக செருப்பு கள்ளனைத்தான் தடை செய்ய வேண்டும். பள்ளிவாசல் என்பது பல நன்மைகள் செய்ய கூடிய ஒரு சிறந்த இடம் ஒருவன் பள்ளிவாசலை தவராக பயன் படுத்தியமைக்காக எப்படி பள்ளிவாசலை தடை செய்ய முடியாதோ அப்படித்தான் FACEBOOK இதை ஒருவன் தவராக பயன் படுத்தியமைக்காக FACEBOOKயே தடை செய்ய கூடாது. இதில் இருக்கும் நல்லதை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.FACEBOOKகில் நபி(ஸல்)அவர்களின் கேலி சித்திரம் வரைந்த இவன் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.
Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends